Thursday, October 16, 2008

ஸ்ரீராம் நீஞ்சுகிறான்

ஸ்ரீராம் நீந்தி வருகிறான்.






எங்கள் பேரன் ஸ்ரீராம் (ஏப் 7, 2008) தற்போது நன்றாக நீந்துகிறான். துறுதுறுவென பார்த்துக் கொண்டு குழந்தை நீஞ்சுவது கண்கொள்ளா காட்சி. 14 அக்டோபர் 2008 அன்று அவன் நீந்துவதை இங்கு பார்க்கவும்.

15 அக்டோபர் 2008 அன்று குழந்தை Sriram முதன்முதலாக உட்கார ஆரம்பித்தான்.


குழந்தை ஸ்ரீராமுடன் நானும், விஜயாவும் (21 ஆகஸ்ட் 2008 அன்று)



ராஜப்பா
16-10-2008 09:15 காலை

Tuesday, October 14, 2008

அதிதியின் மழலைகள்

அதிதியின் மழலைகள்

இதெல்லாம் 2008 செப்டம்பர் இறுதி, அக்டோபர் முதலில் நடந்தவை.

# 1. இரவு 10-15க்கு, விரித்திருந்த பாயில் சப்பணம் இட்டு அழகாக உட்கார்ந்த அதிதி, பாட்டியையும் தன் பக்கத்தில் உட்காரச் சொல்லி பாட்டு பாட ஆரம்பித்தாள். பின்னர், அர்விந்தையும், கிருத்திகாவையும் கூப்பிட்டு "ஒக்காந்துக்கோ அப்பா, ஒக்காரு அம்மா" என்று கட்டாயமாக உட்கார வைத்தாள். பிறகென்ன, அடுத்த 30 நிமிஷத்திற்கு இன்னிசை மழைதான், அழகிய மழலையில் !!

# 2. அடுத்த நாள் இரவு எங்கள் அறைக்கு வந்து, "நான் தான் தாத்தாவுக்கு காலில் எண்ணெய் தடவி விடுவேன்; பாட்டி நீ ஒக்காந்துக்கோ !" என்று பாட்டிக்கு அன்புக் கட்டளை போட்டுவிட்டு, தன் பிஞ்சுக் கையால் எனக்கு எண்ணெய் தடவி நீவி விட்டாள். இது போன்ற சேவைகளுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

# 3. இது இன்னொரு நாள் மாலை. என்னையும், விஜயாவையும் உட்கார வைத்து, பாத்திரத்திலிருந்த புளியோதரையை கரண்டியில் எடுத்து, தன்னுடைய இடது கையால் என்னுடைய (ம்ற்றும் விஜயாவினுடைய) வலது கையை தாங்கிக்கொண்டு, என் கையில் ஒரு தாயின் அல்லது பாட்டியின் பரிவு, பாசத்தோடு புளியோதரையை கொடுத்தாள். So much kindness, so much compassion in her eyes !! நாங்கள் சாப்பிட சாப்பிட, "இன்னும் கொஞ்சம் சாப்பிடு தாத்தா," "இன்னும் கொஞ்சம் பாட்டி" என்று போட்டுக்கொண்டேயிருந்தாள். அன்று, என் வயிறு மட்டுமா நிரம்பியது என்று நினைக்கிறீர்கள் , மனஸே நிரம்பியது.

# 4. இன்னொரு மாலையில், விஜயாவின் முழங்கையில் ஒரு சின்ன காயத்தை அதிதி பார்த்து விட்டாள். அவ்வளவுதான் - "பாட்டி ! வ்ந்து என் பக்கத்திலே ஒக்காந்துக்கோ; க்ரீம் தடவி விடறேன்" "நானே ஒனக்கு மம்மம் போடறேன்"னு சொல்லி, பாட்டி கையிலே ரெண்டு கரண்டி தயிர் சாதம் போட்ட பிறகே, குழந்தை சமாதானம் ஆனாள்.

GOD Bless Aditi, our Darling

Rajappa
10:30am 14 Oct 2008

Sunday, October 05, 2008

பேத்திகளின் மழலை முத்துக்கள்

பேத்திகளின் மழலை முத்துக்கள்.
Sowmya, Aditi, Easychair

# 1. "ஒங்க வீட்டிலே தாத்தா-பாட்டி இருக்கா மாதிரி, என்னோட வீட்டிலேயும் தாத்தா-பாட்டி இருக்காளே!"

இது தனுஷிடம் ஸௌம்யா பெருமையுடன் சொன்னது. இந்தக் குழந்தைகளுக்குத்தான் தாத்தா-பாட்டி மேலே என்ன பெருமை! நாங்கள் ஸௌம்யாவின் வீட்டில் எப்போதும் இருப்பதில்லை என்ற வருத்தமும் குழந்தையின் இந்த செயல்பாட்டில் தெரிகிறது.

# 2. "நீயும் பெங்களூர் போயிட்டு வாயேன்," என்று ஸௌம்யாவிடம் சொன்னபோது, கன்னத்தில் கையை வைத்துக்கொண்டாள் - "பெங்களூருக்கு போலாமா, இல்லே இங்கேயே இருக்கலாமா, யோசிச்சிண்டு இருக்கேன் !"

# 3. "என்னோட பேசு தாத்தா," அதிதி சொன்னபோது 'நான் இங்கேதானே பேசிண்டு இருக்கேன்"னு பதில் சொன்னேன். "என் பக்கத்திலே உக்காந்திண்டு என்னோட பேசு தாத்தா !" - இது அதிதியின் மறுமொழி.

# 4. ஒரு இரவுப்போதில் அதிதி ஈஸிசேரிலேயே வாந்தி எடுத்துவிட்டாள். ஈஸிசேரை சுத்தம் செய்வதற்காக அதன் துணியை கழட்டியது அதிதி பார்க்கவில்லை. 2 நிமிஷம் கழித்து துணி இல்லாததை பார்த்த அதிதி, "தாத்தா, ஈஸிசேர் ஒடஞ்சி போச்சி தாத்தா, நான் இனிமே எங்க படுத்துப்பேன் தாத்தா?" அழுது தீர்த்து விட்டாள். அடுத்த நாள், சுத்தம் செய்தபின் துணியை போட்டதும், அதிதி "ஹை, ஈஸிசேர் நன்னா ஆயிடுத்து" என சந்தோஷத்தில் குதித்து அதில் ஓடிப் போய் படுத்துக்கொண்டாள். "பாட்டியும், தாத்தாவும் ஈஸிசேரை நன்னா பண்ணிட்டா" அப்பிடின்னு அர்விந்த்கிட்டே சொல்லி சந்தோஷப்பட்டாள்.

rajappa
11:40am 5 Oct 2008