Monday, November 02, 2009

ஹரிஸ்ரீ வித்யாலயத்தில் அதிதி

இந்த வருஷம் அதிதியை ஹரிஸ்ரீ வித்யாலயம் என்னும் ஸ்கூலில் சேர்த்திருக்கிறோம். Pre-Primary Class. வீட்டிலிருந்து 1 1/4 கிமீ தூரத்தில் இருக்கும்.

ஸ்கூல் காலை 1045 - 1245 வரை. இங்கு பல புதிய விஷயங்களை பார்க்கிறேன்.
  • ட்ரெஸ் (பெண் குழந்தைகளுக்கு) பாவாடை - சட்டை தான். துணியை அவர்களிடமிருந்து வாங்கி நாம் தைத்துக் கொள்ளவேண்டும்.
  • டீச்சர்களை ஆசார்யா என்றுதான் அழைக்கவேண்டும். (Miss, Maam கூடாது)
  • ஆசார்யாக்களிடம் Good Morning, Good Evening சொல்லக்கூடாது. நமஸ்தே மட்டுமே சொல்லவேண்டும்.
  • சிறிய பாய் (தாங்களே) போட்டுக்கொண்டு தரையில் தான் உட்காரவேண்டும் - விளையாடும்போதும், வண்ணம் பூசும்போதும், சாப்பிடும்போதும்.
  • மதியம் வீடு திரும்பும்போது, 5 முறை ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் என உரத்த குரலில் சொல்லிவிட்டு கிளம்பவேண்டும்.

பாவாடை சட்டையில் அதிதி


ராஜப்பா
02-11-2009
1000 காலை

Friday, October 16, 2009

Sowmya - Aditi in Rajasthani dress

When we went to Jaipur recently (Oct 2009), we purchased typical Rajasthani dresses for Sowmya, Aditi, and Sriram. They enjoyed wearing the dresses; in fact, they insisted on wearing their new dresses the very next morning. Here are the photos of Sowmya & Aditi.




Sowmya


Sowmya


Aditi



Aditi


Aditi


rajappa
09:50 on 16-10-2009

Saturday, August 22, 2009

அதிதியின் முத்தான மழலைகள்

# 1. அதிதிக்கு நான் ராமாயணம் கதை சொல்வதுண்டு. ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னன் பிறந்ததிலிருந்து ராமாயணத்தை ஆரம்பித்து, விஸ்வாமித்திரருடன் காட்டிற்குச் சென்று அஸுரர்களை அழித்தது, அகலிகைக்கு சாப விமோசனம் அளித்தது, மிதிலைக்குச் சென்று, சிவ தனுஷை ஒடித்து ஸீதையை கல்யாணம் பண்ணிக்கொண்ட காட்சியை சொல்லிக் கொண்டிருந்தேன். உடனே, அதிதி தன் இனிய குரலில் பாடத்தொடங்கினாள் - “ஸீதா கல்யாண வைபோகமே, ராமா கல்யாண வைபோகமே..”

# 2. வழக்கம் போல அதிதிக்கு ராமாயணம் கதை சொல்லிக் கொண்டு இருந்தேன். ஸீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போனதையும், ஜடாயுவைப் பற்றியும் சொன்னபிறகு, நான்பாட்டுக்கு என்னையும் அறியாமலேயே, “அப்றம், ராமர், லக்ஷ்மணன், ஸீதை மூணு பேரும் அங்கேயிருந்து கிளம்பினா ..” என்று சொல்ல, உடனே இடைமறித்த அதிதி, “தாத்தா, ஸீதையைத்தான் அந்த ராக்ஷசன் தூக்கிண்டு போயிட்டானே” என என்னைத் திருத்தினாள்.

# 3. அடுத்த நாள், ஹனுமான் ஸீதையைத் தேடிக்கொண்டு லங்கா போனதையும், எல்லா இடத்திலும் தேடிப்பார்த்து கடைசியில் ஸீதாதேவியை அஷோகவனத்தில் பார்த்ததை அவளுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன். ஹனுமான் ஸீதையிடம், “நீங்கள் இங்கிருப்பதை நான் ஸ்ரீராமனிடம் போய் சொல்லுகிறேன்,” என்று சொன்னார் என சொன்னேன். உடனே அதிதி, “ஏன் தாத்தா, அவர்கிட்டே செல்ஃபோன் இல்லயா,ஃபோனிலேயே சொல்லிடலாமே” என்று கேட்டாள்!

குறிப்பு: அதிதியின் வயசு 3 முடிந்து 2 மாஸம்.

ராஜப்பா
22-8-2009 காலை 10:30 மணி


Tuesday, July 07, 2009

அதிதியின் டாக்டர் விளையாட்டு

தினமும் இரவு 9 அல்லது 9-30 மணியானால் அதிதி டாக்டர் விளையாட்டு ஆரம்பித்து விடுவாள். சில பேப்பர்கள், ஒரு பேனா, ஒரு டார்ச் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பேஷண்ட்டாக கூப்பிடுவாள். முதல் சில நாட்களுக்கு “தாத்தா பேஷண்ட், பாட்டி பேஷண்ட்” என உறவுமுறை சொல்லிக் கூப்பிட்ட அவள், பின்னர் பெயர் சொல்லி கூப்பிட ஆரம்பித்து விட்டாள் - “நாராயணன் பேஷண்ட், விஜயா பேஷண்ட், கிருத்திகா பேஷண்ட் ..” தான் !

அவள் பக்கத்தில் போய் உட்கார வேண்டும் - “ஒங்க பேரு என்ன, ஒங்க வயசு என்ன, ஒங்களுக்கு என்ன ஆச்சு?” என தன் விசாரணையை ஆரம்பித்து, மருந்து அல்லது க்ரீம் எழுதித் தருவாள். “மம்மம் சாப்பிட்ட பிறகு மருந்து சாப்பிடு”, “3 நாளைக்கு சாப்பிடு”, என ஆலோசனைகள் தொடரும். பின் “25 ருப்பீஸ்” fees வாங்கிக்கொண்டு, அடுத்து , “விஜயா பேஷண்ட்” என கூப்பிடுவாள்.

அரைமணி நேரம் இனிமையாக கழியும்.

ராஜப்பா
10:40 மணி
07-07-2009

Tuesday, June 23, 2009

அதிதியின் 3-வது பிறந்த நாள் - ADITI BIRTHDAY

அதிதியின் 3-வது பிறந்த நாள்
புதன்கிழமை, ஜூன் 17, 2009

இன்று அதிதியின் 3-வது பிறந்த நாள். காலையில் அவளது ஸ்கூலில் அதிதி கேக் வெட்டி மற்ற குழந்தைகளுடன் தன் பிறந்த நாளை கொண்டாடினாள்.

மாலை குழந்தைக்கு புத்தாடை போட்டு, மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு அர்விந்த், கிருத்திகா, அதிதி, நான், விஜயா, சதீஷ், வாசு, ராஜி, ஸ்ருதி, சுஜனி, மற்றும் TSG, மாமி ஆகியோர் சென்றோம்.

மாலை 7 மணிக்கு, ஸ்ரீ கற்பகாம்பாள் தாயாருக்கு தங்கப் பாவாடை அணிவித்தனர். இதற்கான ஏற்பாட்டை (ரூ. 750.00 கட்டவேண்டும்) அர்விந்த்-கிருத்திகா செய்திருந்தனர். ஜொலிக்கும் தங்கப் பாவாடையில் அம்மனை தரிஸிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். மிகப் பரவசமாக இருந்தது. இன்று ஒரு வார நாள் என்பதால், பிறந்த நாள் விழா மற்றும் விருந்தை ஜூன் 21ஆம் தேதி ஞாயிறன்று கொண்டாடினோம்.
ஞாயிறு, ஜூன் 21, 2009.

எழுந்தது முதலே நாங்கள் யாவரும் வேலையில் மூழ்கிவிட்டோம். காலையில் ஷாமியானா போடப்பட்டு, மதியம் 25 நாற்காலிகள், சாப்பாட்டு மேஜைகள், மின்விளக்குகள் வந்து சேர்ந்தன. விழா நடக்கும் மொட்டைமாடி அலங்கரிக்கப்பட்டது. ஹோட்டல் அம்பாஸடர் பல்லவாவிலிருந்து கேக்கையும், Spencers கடையிலிருந்து ஐஸ்கிரீம் கப்புகளையும் அர்விந்த் வாங்கிவந்தான். 5-45 மணிக்கு முதல் விருந்தாளி வந்தார். பிறகு நிறைய பேர் வர ஆரம்பித்தன்ர்.

புது ட்ரெஸ்ஸில் இருந்த அதிதி 6-45 மணிக்கு கேக் வெட்டினாள்.




பின்னர் விருந்து ஆரம்பம். Caterer ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குலாப் ஜாமூன், தயிர்வடை, பூரி, உ.கிழங்கு கறி, புலவ், காய்கறி குருமா, பச்சடி, தயிர் சாதம், சிப்ஸ், ஊறுகாய், ஐஸ்கிரீம், பீடா - இதுதான் மெனு. சாப்பாடு நன்றாக இருந்தது.

அதிதியின் class-mates நிறைய குழந்தைகள் வந்திருந்தனர். விழா கோலாகலமாக இருந்தது. யாவருக்கும் அதிதி return gifts கொடுத்தாள். சுமார் 9 மணிக்கு விழா இனிதே முடிவு பெற்றது - இது ஒரு இனிய மாலைப்பொழுது.


நாங்கள் 11 பேர், TSG மாமா, மாமி, வாசு, ராஜி, ஸ்ருதி, சுஜனி, சதீஷ், சுகவனம், சுதா, சந்தர், தனுஷ், விஜயராகவன், மாமி, சுபா, மகேஷ், அர்விந்தின் colleagues, ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராஜப்பா
23-06-2009 காலை 1000

Friday, June 19, 2009

அதிதியின் வெள்ளிக்கிழமை ட்ரெஸ் ADITI

அதிதியின் ஸ்கூலில் (BAMBOOLA, RA Puram) 19-06-2009 முதல் புது ட்ரெஸ் ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் இந்த யூனிஃபார்மை அணிந்து செல்லவேண்டும்.

இதுதான் அந்த புது ட்ரெஸ்





ராஜப்பா
19-06-2009
காலை 10 மணி

Tuesday, June 09, 2009

ஸௌம்யா, அதிதி ஸ்கூல் போகிறார்கள்...

SOWMYA - ADITI GO TO SCHOOL (Pre-KG)


ஸௌம்யாவை இந்த வருஷம் (2009) Pre-KG யில் சேர்த்தார்கள். வீட்டிற்கு அருகிலேயே ஸ்கூல் உள்ளது. ஜூன் 4-ஆம் தேதி முதல் போகிறாள். அருண் மோட்டார் சைக்கிளில் கொண்டு போய் விடுகிறான்; ஸ்கூல் van-ல் திரும்பி வருகிறாள்

அதிதியை சென்ற வருஷமே (2008) ஸ்கூலில் சேர்த்தது. இது இரண்டாவது வருஷம் - ஸீனியர் !! அவள் ஸ்கூல் ஜூன் 8-ஆம் தேதியன்று திறந்தது. கிருத்திகாவுடன் ஸ்கூல் போகிறாள்.



rajappa
11:00 am on 09 June 2009

Monday, June 01, 2009

அதிதியின் பேச்சுக்களும், விளையாட்டுகளும் Aditi


அதிதியைப் பற்றி எழுதி கிட்டத்தட்ட ஆறு மாஸங்கள் ஓடிவிட்டன. இந்த இடைவெளியில் குழந்தையின் பேச்சும், ஆட்டமும், ஓட்டமும், டான்ஸும், பாட்டும் பன்மடங்கு பல நூறு மடங்கு வளர்ந்துள்ளது - எழுதி விளக்க முடியாது.

தினமும் இரவு 9-30 மணியானால், சாப்பாடு முடிந்ததும், “தாத்தா, நம்பளோட ரூமுக்குப் போலாம் தாத்தா,” என சொல்லி, ரூமிற்குள் நுழைந்ததும் “ஏஸி போடு தாத்தா,” என ஏஸி போடவைத்து, அடுத்த 1 1/2 மணி காலத்திற்கு ஒரே பாட்டும், டான்ஸும்தான்; அவளுக்கு ஸமமாக தன்னுடைய பாட்டியும் ஆட வேண்டும், எக்ஸர்சைஸ் பண்ண வேண்டும். இந்த 90 நிமிஷங்கள் எங்கள் தினத்தின் பொன்னான தருணங்கள் ...

நேற்றிரவு (30-05-2009) நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, ஒரு notepad ஐயும், பேனாவையும் வைத்துக்கொண்டு, “பாட்டி, நாந்தான் டாக்டர், நீ பேஷண்ட்; உனக்கு என்ன உவ்வா?” என்று கேட்டு, “ஒம் பேரு என்ன, வயசு என்ன?” கேட்டு பேப்பரில் எழுதி, மருந்துகளை எழுதி, “ரெண்டு நாளைக்கு சாப்பிடு, மம்மம் சாப்பிட்ட பிறகு மருந்து சாப்பிடு,” சொல்லி, “ரெண்டு நாளைக்கு அப்றம் பாக்கறேன், bye" சொல்லி முடித்தாள். பின்னர், நான் patient. எனக்கும் மருந்து எழுதிக் கொடுத்தாள் - ஒரு சிறிய மாற்றம், நான், மம்மம் சாப்பிடுவதற்கு முன்னாலே, மருந்து சாப்பிடணும்! டாக்டர் அதிதி!!

God Bless Aditi
rajappa
11:15am on 01-06-2009

Friday, May 29, 2009

ஸ்ரீராமிற்கு இரண்டாவது மொட்டை SRIRAM


ஸ்ரீராமிற்கு முதலில் வைத்தீஸ்வரன் கோயிலில் (2009) ஃபிப்ரவரி 1 ஆம் தேதியன்று முடி இறக்கினோம். விவரம் இங்கே.

குழந்தைக்கு இரண்டாவது மொட்டை திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் கோயிலில் (2009) மே மாஸம் 19 ஆம் தேதியன்று நடத்தப் பெற்றது. இது காயத்ரியின் பெற்றோர் செய்த ஏற்பாடு !! காயத்ரி, ஸௌம்யா, காயத்ரியின்
பெற்றோர் போயிருந்தனர். அருண் மற்றும் நாங்கள் போகவில்லை.

போட்டோக்கள் (2009) மே 28 ஆம் தேதியன்று எடுக்கப்பட்டவை.


ராஜப்பா
இரவு 8:45 மணி
29-05-2009

Tuesday, May 19, 2009

Sowmya Celebrates Her 3rd Birthday - 17-5-2009

ஸௌம்யாவின் மூன்றாவது பிறந்த நாள்

17-05-2009, ஞாயிற்றுக்கிழமை இதைக் கொண்டாடினோம். திருவான்மியூரில் அருண் வீட்டில் விழா நடந்தது. நானும் விஜயாவும் மாலை 5 மணிக்கே போய்விட்டோம்.

6-30 மணி முதல் மற்றவர்கள் வர ஆரம்பித்தனர். அதிதி ஒரு புதிய அழகிய “அனார்கலி” சூடிதாரில் வந்தாள். ஸௌம்யா நாங்கள் வாங்கிக் கொடுத்த பாவாடை-சட்டையை போட்டுக்கொண்டாள்; ஸ்ரீராமிற்கும் புது ட்ரெஸ்.

ஸௌம்யாவிற்கு “அனார்கலி” சூடிதார் அர்விந்த்-கிருத்திகா-அதிதி பரிசளித்தனர்; சதீஷ் அழகிய ஒரு BAG பரிசளித்தான். (அதிதிக்கும் ஒன்று)

7-15 மணிக்கு ஸௌம்யா கேக் வெட்டினாள்.

பின்னர் விருந்து ஆரம்பம். குலாப் ஜாமூன் மற்றும் கேக் - அம்பாஸடர் பல்லவா ஹோட்டலிலிருந்து. Phulka சப்பாத்தி, அதற்கான இரண்டு வகை கறி/கூட்டுகள், பனீர் பட்டர் மஸாலா; Noodles; - இவையும் வெளியிலிருந்து தருவிக்கப்பட்டவை. விஜயாவும், காயத்ரியும் வீட்டிலேயே ஜூஸ், தயிர் சாதம் பண்ணினார்கள். விருந்து நன்றாக இருந்தது. எல்லாவற்றையும், குறிப்பாக தயிர்சாதத்தை, ரசித்து சாப்பிட்டோம்.

அருண், காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம், நாங்கள் இருவர், அர்விந்த், கிருத்திகா, அதிதி, சதீஷ், காயத்ரியின் அப்பா-அம்மா, பெரியப்பா-பெரியம்மா, சுரேஷ், பானு, இரண்டு குழந்தைகள், பெரியப்பா பெண் சித்ரா, இரண்டு குழந்தைகள், கணேஷ், காயத்ரியின் அம்மா வழியிலிருந்து பெரியம்மா, பெரியப்பா, சுந்தர் அண்ணா, கோபால் மாமா, கிட்டா மாமா, சாரதா, ஸ்வாதி, விஜயராகவன், மாமி, சந்தர், ஜனனி - மொத்தம் 32 பேர்.

9 மணிக்கு ஒவ்வொருவராக வீடு திரும்பினர். காயத்ரி-அருணுக்கு உதவி செய்துவிட்டு நாங்கள் வீடு திரும்பும்போது இரவு மணி 10-45. அருண் காரில் கொண்டு வந்து விட்டான்.

ஸௌம்யாவின் 3-ம் பிறந்த நாள் விழா மிக இனிதாக சிறப்பாக நடந்தேறியது. குழந்தைகளுக்கும் அருண்-காயத்ரிக்கும் எங்கள் ஆசிகள்.

ராஜப்பா
19-05-2009
பகல் மணி 12:25

Saturday, May 09, 2009

ஸௌம்யாவிற்கு அக்ஷராப்பியாஸம் - Aksharabyasam to Sowmya

யாகுந்தேந்து துஷாரஹார தவளா யா ஸுப்ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வரதண்ட மண்டிதகரா யா ஸ்வேத பத்மாஸநா
யா ப்ரஹ்மாச்யுத ஸங்கரப்ரப்ருதிர் தேவைஸ்ஸதா பூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ நிஸ்ஸேஷ ஜாட்யாபஹா.

எங்கள் ஸௌம்யாவிற்கு இப்போது 3 வயசாகப் போகிறது (17-5-2006 அன்று பிறந்தாள்). அவளுக்கு சென்ற வியாழன் 7 மே அன்று அக்ஷராப்பியாஸம் செய்து வைத்தோம்.

வேண்டிய சாமான்களையும், புஷ்பம், அரிச்சுவடி போன்றவைகளையும் மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் வாங்கினோம். மற்ற சாமான்களை அருண் திருவான்மியூரில் வாங்கினான்.
7 ஆம் தேதி காலை 7-15க்கே விஜயாவும் நானும் அருண் வீட்டிற்கு சென்று விட்டோம். காயத்ரியின் அப்பா-அம்மா அங்கே ஏற்கனவே இருந்தனர். கோபால மாமா பூஜை பண்ணுவதாக இருந்தார். கடைசி நேரத்தில் அவருக்கு உடம்பு சரியாக இல்லாததால், கிட்டா மாமா (கிருஷ்ணன்) தான் வந்து மந்திரம் சொல்லி பூஜை பண்ணினார்.
காலை 8-45 க்கு ஆரம்பித்த பூஜை 10-15க்கு முடிவுற்றது. ஸரஸ்வதீ தேவிக்கு அருணும், ஸௌம்யாவும் நிறைய பூ போட்டு அர்ச்சித்து பூஜை செய்தனர். ஸௌம்யாவின் நாக்கில் தேன் தடவப் பெற்றது. (ஸ்ரீராமிற்கும்தான் !) முதலில் நெல்லிலும், பின்னர் ஸ்லேட்டிலும் தமிழ் எழுத்துக்களை ஸௌம்யா எழுதினாள்.

பூஜை முடிந்ததும் அப்பளம், வடை, பாயஸத்துடன் விருந்து. காயத்ரியின் அம்மா பண்ணினார்.
அருண், காயத்ரி, குழந்தைகள், விஜயா, நான், காயத்ரியின் அம்மா, அப்பா, கிட்டா மாமா, சாரதா, ஸ்வாதி, விஜயராகவன், சாரதா மாமி (சந்தரின் பெற்றோர்), கிருத்திகா, அதிதி ஆகியோர் சாப்பிட்டோம். (அர்விந்த் அன்று பெங்களூர் போயிருந்தான்)

இவ்வாறாக, குழந்தை ஸௌம்யாவின் அக்ஷராப்பியாஸம் நல்ல முறையில் நடந்தது. குழந்தைக்கு ஸரஸ்வதியின் பரிபூரண அருள் கிடைக்கட்டும்.

ஸ்ரீ ஸரஸ்வதீ தேவ்யை நம:



ராஜப்பா
12:30 09-05-2009