Saturday, October 20, 2012

பகவத் கீதை - 12-வது அத்தியாயம்.

அதிதியும் ஸௌம்யாவும் (இருவருக்கும் தற்போது ஏழு வயசு 5 மாஸம்) பகவத் கீதை ஸ்லோகங்கள் சொல்வதைப் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.

அதிதி


ஸௌம்யா
2011ம் வருஷம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி அதிதி கீதை 11-ஆம் அத்தியாயம் சொல்வதை எழுதினேன்.

இப்போது இரண்டு மாஸங்களாக அத்தியாயம் 12 (பக்தி யோகம்)  சொல்லுகிறார்கள். “ஏவம் ஸதத-யுக்தா யே பக்தாஸ்” என ஆரம்பித்து, “மய்யேவ மன ஆதத்ஸ்வ” என சொல்லி, கடைசியில் ”ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா” என 14-ஆம் ஸ்லோகத்தில் முடிக்கிறார்கள்.

கீதாசாரியன் ஸ்ரீ கிருஷ்ணன் குழந்தைகளுக்கு அருள் புரிவார்.

கீதை 12ம் அத்தியாயம் சொல்லும் போட்டியில்
அதிதிக்கு 3-11-2012 அன்று கொடுத்த
மெடல்

ராஜப்பா
6:40 மாலை
20-10-2012

Monday, June 18, 2012

அதிதியின் 6-வது பிறந்த நாள்.

அதிதிக்கு ஜுன் 17-ஆம் தேதி பிறந்த  நாள். இப்போது (2012-ல்) 6 வயசு பூர்த்தி ஆயிற்று.

வீட்டில் குழந்தை (அர்ஜுன்) பிறந்து 15 நாட்களே ஆகியிருப்பதாலும், கிருத்திகா பிரசவித்து தேறி வருவதாலும், இந்த வருஷம் அதிதியின் பிறந்த நாளை நிறைய கொண்டாட வில்லை. காலையில் அவளுக்கு புது டிரெஸ் போட்டுவிட்டோம்; விஜயா பாயஸம் பண்ணினாள். சுதன் குழந்தை ஹர்ஷிதா வந்தாள்.















திடீரென மாலை அர்விந்த் ஏற்பாடுகள் பண்ண ஆரம்பித்தான். அருண், காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் ஆகியோர் வந்தனர். அருண் வரும்போது கேக் வாங்கி வந்தான் [ இது அதிதிக்குத் தெரியாது]. ப்ரத்யுன், ராம், ஜனனி வந்தனர். TSG மாமா-மாமியும் வந்தனர். கிருத்திகாவும், குழந்தை அர்ஜுனைத் தூக்கிக் கொண்டு வந்தாள்.

இவ்வளவு பேர் சூழ்ந்திருக்க, அதிதி கேக் வெட்டினாள்; SURPRISE ஆக இருந்ததால் அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சாப்பிட PIZZA CORNER லிருந்து அர்விந்த் ஆர்டர் பண்ணினான். ஏழு மணிக்கே ஆர்டர் பண்ணியும் இரவு 9-15 வரை PIZZA வரவே இல்லை. பின்னர் அர்விந்த் HOT CHIPS கடைக்குப் போய் இட்லி, மசால் தோசை, பூரி ஆகியவைகளை வாங்கி வந்தான்; எல்லாரும் சாப்பிட்டு முடிக்க இரவு 10 மணிக்கு மேல் ஆயிற்று. 10-30 க்கு அருண் குடும்பம், ஜனனி குடும்பம் வீடு திரும்பினர்.

கடைசியில் அதிதியின் 6-வது பிறந்த நாள் விழா நன்றாகவே நடந்தது. அதிதிக்கு எங்கள் அன்பு ஆசிகள்.

ராஜப்பா
18-6-2012
9:00 மணி

Wednesday, June 13, 2012

அர்விந்த்-கிருத்திகா குழந்தை புண்ணியாஹவசனம்.

அர்விந்தின் குழந்தை ஜூன் 2-ஆம் தேதி பிறந்தான். காலை 9-42க்கு. ஸ்வாதி நக்ஷத்திரம்.
குழந்தையின் புண்யாகவசனம் ஜூன் 12-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. 2-ம் மாடியில் கிருத்திகாவின் பெற்றோர் வீட்டில் நடந்தது. முதலில் உறவினர் பலரையும் அழைத்திருந்தேன். ஆனால். சில காரணங்களால் யாரையுமே அழைக்க வேண்டாம் என நிச்சயித்து, எல்லாருக்கும் ஃபோன் மூலம் தெரிவித்து விட்டோம். அருண் குடும்பம், அஷோக் குடும்பம், அர்விந்த், நாங்கள், மாமா, மாமி மட்டுமே.

அஷோக்-நீரஜா 11-ஆம் தேதி இரவு 10 மணிக்கு பெங்களூரிலிருந்து வந்தனர். அருண் குடும்பம் 12-ஆம் தேதி காலை 7-15க்கே வந்தனர். [ ஸௌம்யா முதல்நாள் இரவே இங்கு தூங்கினாள்]

குழந்தைக்கு மங்கள ஸ்நானம் ஆயிற்று. எல்லாரும் தயாராகி 8-30க்கு மாடிக்கு சென்றோம். குழந்தைக்கு நிறைய ட்ரெஸ் அர்விந்த், அஷோக், அருண், நாங்கள் வாங்கினோம். செயின், மோதிரம், பொன்காப்பு, முக்காப்பு, வெள்ளி காப்பு, அரைஞாண் கயிற்றுக்கான காசுகள் ஆகியவைகளை தாத்தா-பாட்டி சீராக நாங்கள் ஞாயிறு ஜூன் 10 ஆம் தேதி வாங்கினோம். மயிலாப்பூர் NAC JEWELLERS ( North Mada Street) -ல் வாங்கினோம்.



சாஸ்திரிகள் 4 பேர் வந்தனர். காலை 8-45க்கு ஆரம்பித்து, 10-45க்கு முடிவுற்றது. தொட்டில் போட்டோம். பின்னர் 12-15 பேர் சாப்பிட்டோம்; வீடு திரும்பினோம் [First floor]





குழந்தைக்கு அர்ஜுன் என்று பெயரிட்டுள்ளோம். சுப்ரமணியம் என்பது ஸர்மா-நாமா.

உள்ளூர் வெளியூர் உறவினர் யாவருக்கும் ஃபோன் மூலம் செய்தி சொன்னோம்.

குழந்தை நன்றாக இருக்கிறான்; எல்லாம் அவன் அருள்.

ராஜப்பா
6:40 மாலை
13-6-2012
அஷோக் நீரஜா பகல் 4 மணிக்கு பெங்களூர் புறப்பட்டனர். அவர்களது 3-30 மணி ரயில் டிக்கெட்டுகள் கன்ஃபெர்ம் ஆகவில்லை. எனவே VOLVO AC பஸ்ஸில் போனார்கள். அருண் குடும்பத்தினர் இரவு 10-15க்கு படூர் புறப்பட்டனர்.











Monday, June 04, 2012

எங்கள் வீட்டில் புது வரவு ..

எங்கள் வீட்டில் ஒரு இனிய புது வரவு. 2012ம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி, சனிக்கிழமை, ஸ்வாதி நக்ஷத்திரத்தில் காலை 9-42 க்கு அர்விந்த் - கிருத்திகாவிற்கு ஒரு அழகான ஆண் மகவு பிறந்தது. 3.3 கிலோ.

முன்னதாக, ஜூன் 1-ஆம் தேதி கிருத்திகாவிற்கு வலி எடுக்க ஆரம்பித்தது. உடனே இரவு 9-15க்கு அவளை வேளச்சேரியில் ஏ.ஜி.எஸ் காலனியில் உள்ள KS Hospital-ல் சேர்த்தோம். நாங்கள் இருவர், கிருத்திகாவின் பெற்றோர், அதிதி, அர்விந்த் எல்லாரும் போனோம். அவளை அட்மிட் பண்ணி விட்டு நாங்கள் வீடு திரும்பினோம். அர்விந்த அவளுக்குத் துணையிருந்தான்.

மறுநாள் காலை 8 மணிக்கே அங்கு சென்றோம். 0942க்கு குழந்தை பிறந்தான். ஆண் குழந்தை. நார்மல் பிரசவம். குழந்தையை எல்லாரும் தூக்கிக் கொண்டனர்; ஒரே சந்தோஷம். அதிதிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.  நாங்கள் பக்கத்திலேயே ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு மாலை 4க்கு வீடு திரும்பினோம். ஜூன் 3-ஆம் தேதி பகல் 12 மணி சுமாருக்கு டிஸ்சார்ஜ் பண்ணினார்கள். குழந்தை வீடு வந்து சேர்ந்தான்.
குழந்தையும், கிருத்திகாவும் நலமாக இருக்கின்றனர்.

எல்லாம் ஸ்ரீராமனின் அருள். எல்லாரும் நன்றாக இருக்கட்டும்.

ராஜப்பா
மாலை 6-15 மணி
ஜூன் 4, 2012

குழந்தைக்கு அர்ஜுன் என பெயரிட எண்ணியுள்ளோம்.


Friday, May 18, 2012

ஸௌம்யா 6-வது பிறந்த நாள்

ஸௌம்யாவிற்கும் அதிதிக்கும் இந்த மே - ஜூனில் 6 வயசு பூர்த்தியானது. ஸௌம்யாவிற்கு மே 17; அதிதிக்கு ஜூன் 17.

ஸௌம்யாவின் பிறந்த நாளை அருண்-காயத்ரி இந்த வருஷம் கேக் வெட்டி அவ்வளவு சிறப்பாக கொண்டாடவில்லை. மே 17 அன்று காலை 7 மணிக்கே நான், விஜயா, அதிதி, சாவித்திரி நால்வரும் 21-H AC பஸ்ஸில் படூர் கிளம்பினோம். அருண் வீட்டிற்கு சாவித்திரி வருவது இதுவே முதல் தடவை.






காலை சிற்றுண்டியும் பின்னர் மதிய சாப்பாடும் சாப்பிட்டோம். குழந்தைகள் மூவரும் நன்றாக விளையாடினர்.  மாலை 6-15க்கு எல்லாரும் (காயத்ரி, குழந்தைகள் உட்பட) 21H AC பஸ்ஸில் திருவான்மியூர் திரும்பினோம். 8-15 மணிக்கு அர்விந்த், கிருத்திகா, அருண், நாங்கள் எல்லாரும் 2 கார்களில் HOTEl ASCENDAS சென்றோம். GBS, மாமி, மீனா, சங்கர், குழந்தை இவர்கள் அங்கு வந்தனர். அங்கு தடபடலான விருந்து. நான் PASTA சாப்பிட்டேன். மற்றவர்கள், தோசை, இட்லி, PIZZA சாப்பிட்டார்கள்.

பின்னர் வீடு திரும்பும்போது இரவு மணி 10-30. அருண் ஆகியோர் அங்கிருந்தே படூர் கிளம்பினார்கள்.

இப்படியாக ஸௌம்யாவின் 6-வது பிறந்த நாள் சிறப்பாக நடந்தது. குழந்தைக்கு எங்கள் அன்பு ஆசிகள்.

ராஜப்பா
9:00 மணி
18-5-2012

Sunday, April 08, 2012

ஸௌம்யா, அதிதி இப்போது முதல் வகுப்பில் ...

ஸௌம்யாவிற்கும், அதிதிக்கும் தற்போது (ஏப்ரல், 2012) 5 3/4 வயசு ஆகிறது. இந்த மே மாதம் ஸௌம்யாவும், ஜுனில் அதிதியும் 6 வயது பூர்த்தியாகிறது.

இருவரும் ஜூன் 2012 முதல் FIRST Standard போகிறார்கள். படிப்பின் முதல் படியில் ஏற இருக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் ஸரஸ்வதியின் அருள் கிட்டட்டும்; நிறைய படித்து நன்றாக இருக்கட்டும்.

ஸௌம்யாவிற்கு ஜூன் 7-ம்,அதிதிக்கு ஜூன் 14-ம் ஸ்கூல் திறக்கிறது. ஸ்ரீராமிற்கு ஜூன் 7-ஆம் தேதி.

ராஜப்பா
05-04-2012
09:30 மணி

எல்லா ஃபோட்டோக்களும் எடுக்கப்பட்ட தினம் : 25 மார்ச் 2012












Following Photos Taken on June 12th, 2012 at Punyahavachanam